டில்லி,

பாஸ்போர்ட்டில் மாற்றம் கொண்டு வந்துள்ள பாஜக அரசு மீது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக அரசின் பாகுபாடு மனப்பான்மை அதில் வெளிப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

பாஸ்போர்ட்டில் சில மாற்றங்களை செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிகளில் குடியேற்றவாசிகளுக்கு பாஸ்போர்ட் மஞ்சள் நிறத்திலும், மற்றவர்களுக்கு நீல நிறத்திலும் இருக்கும் என்றும் என்று கூறி உள்ளது.

மேலும்,  பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் முகவரி அச்சிடப்படாது என்றும், அதனால் முகவரிக்கான சான்றாக அதனைக் கொள்வது நெடுங்காலத்துக்கு நீடிக்காது என்றும்  குறிப்பிட்டுள்ளது.

இதற்கு நாடு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளார்.

இது மோடி அரசின் பாகுபாட்டையே காண்பிக்கிறது என்று குற்றம் சாட்டி உள்ளார். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அரசு இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதுவதாகவும், ஆளுங்கட்சியின் பாரபட்சமான போக்கை இது காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.