‘ஆரஞ்சு’ நிற பனி போர்வைக்குள் சிக்கிய கிழக்கு ஐரோப்பா

 கிழக்கு ஐரோப்பா பகுதிகளில்  ‘ஆரஞ்சு’ நிறத்தில் படர்ந்திருந்த பனி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக பெய்து வரும் பனியை விட இந்த முறை அதிக அளவில் பனி படர்ந்திருப்பது, கிழக்கு ஐரோப்பா பகுதிகளை ஆரஞ்ச நிறத்திலான போர்வை படர்ந்திருப்பதுபோல காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

இது அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாது உலக மக்களையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் மற்றும், ரஷ்யா, பல்கேரியா, , ரொமானியா மற்றும் மால்டோவா போன்ற நாடுகளிலும் ஆரங்ச நிறத்திலான பனி படர்ந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த மஞ்சள் நிறத்திலான பனி படர்வுக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சஹாரா பாலைவனத்தில் வீசும் மண் புயலானது, பனி மற்றும் மழையுடன் கலந்துள்ளதால் இந்த நிறத்தில் பனி படர்ந்திருக்கிறது என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், வேறு சிலரோ, வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வீசும்  மணல் மற்றும் தூசியின் துகள்கள் காரணமாகவே ஆரஞ்சு நிறத்தில் மாறி இருப்பதாகவும்,   கஜகஸ்தானில் ஏற்பட்ட பனி புயல் காரணமாக அந்த பகுதியில் உள்ள களிமன் ரசாயன மாற்றம் காரணமாக இவ்வாறு நிறம் மாறியிருக்கலாம் என்று வெறோரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், ரஷ்யாவின் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் கண்காணிப்பு அமைப்பு, பனி, மாசுக்கள், நைட்ரேட்டு கள் மற்றும் பெரிய அளவிலான இரும்புச் சத்துக்கள் ஆகியவை கலந்து, அதன் காரணமாக  வேதியியல் மாற்றத்தின்  விளைவாக இருக்கலாம் பனியின் நிறம் மாறியிருக்கலாம் என்று கூறி உள்ளது.

ஆனால், இதுபோன்ற ஆரஞ்சு நிறத்திலான பனி போர்வை 5 வருடங்களுக்கு ஒரு முறை உருவாகும் என்றும், அது அந்த பகுதி மண்ணின் அளவை பொறுத்து அமையும் என்றும் கூறப்படுகிறது.

இந்த பனிப்போர்வை சூழ்ந்துள்ள படங்களை, ரஷ்ய நகரான சோச்சிக்கு அருகில் உள்ள பனிச்சருக்கு விளை யாட்டு திடலில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

You may have missed