சகதியில் சிக்கியவரை கை கொடுத்து காப்பாற்றிய குரங்கு: வைரலான போட்டோ

ஜகார்த்தா: ஆற்றில் தவித்தவரை குரங்கு ஒன்று கை தூக்கிவிட்ட போட்டோ இணையத்தில் வைரலாக பரவி பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது.

தெற்காசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இடமான அறியப்படுவது போர்னியோ காடு. குரங்களைப் பாதுகாக்க ஒரு தனியார் அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் அந்த குரங்கள் வாழும் காட்டிற்குள் சென்று அங்குள்ள பாம்புகளைப் பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

அப்பொழுது அவர் ஒரு சகதியில் சிக்கிக்கொண்டார். அப்பொழுது அங்கிருந்த உராங் உடான் குரங்கு ஒன்று அவருக்கு கை கொடுத்து சகதியிலிருந்து எழுந்து வர உதவியது.

இதை அங்கிருந்த மற்றொரு ஊழியர் அனில் பிரபாகர் என்பவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார்.அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத் தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதுபற்றி பேசிய பிரபாகர், அந்த பகுதியில் பாம்புகள் இருக்கின்றன. அவற்றை தேடி தான் அவர் சென்றார். ஆனால் அவர் சகதியில் சிக்கிக் கொண்டதாக நினைத்து உராங் உடான் குரங்கு அவருக்கு மிக அருகில் வந்து அவருடைய கையை பற்றி மேலே வர உதவியதை கண்டேன்.

என்னால் உண்மையில் அதை நம்ப முடியவில்லை. அப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த தருணத்தைப் பிடித்தேன். மிகவும் உணர்ச்சிமயமான நேரம் என்றார்.

கார்ட்டூன் கேலரி