ஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா…

சென்னை:

ரத்தநாடு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களும் வைரஸ் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா முடக்கம் காரணமாக மக்களில் பணியாற்றி நிவாரணம் வழங்கியதால், அரசியல் கட்சியினரும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொரோனாவுக்கு பலியான நிலையில், இதுவரை  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை குணமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரத்தநாடு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளத. இதையடுத்து, அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி