ஒரத்தநாடு தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி: திமுக வேட்பாளர் தோல்வி

 

தலைப்பைப் பார்த்து குழப்பமாக இருக்கிறதா.  விஷயம் இதுதான். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. அமைச்சர் வைத்தியலிங்கம். இவர்தான் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்.

ராமச்சந்திரன் - வைத்தியலிங்கம்
ராமச்சந்திரன் – வைத்தியலிங்கம்

இவரை எதிர்த்து, திமுக சார்பில் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் ராஜ்குமார். இவர், திமுகவின் முன்னாள் தஞ்சை தொகுதியின் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பழனி. மாணிக்கத்தின் தம்பி.

இவருக்கு ஒரத்தநாடு தொகுதியை தலைமை அறிவித்தவுடன், “நான் கேட்ட தொகுதியை தராமல், தோற்கிற தொகுதியை தலைமை கொடுக்கிறதே” என்று ஆதங்கப்பட்டு போட்டியிடுவதில்லை என அறிவித்தார்.

இதனால் அத் தொகுதியில் தி.மு.க. சார்பாக ராமச்சந்திரனை அறிவித்தது தலைமை.

 

ராஜ்குமார்
ராஜ்குமார்

இப்போது தேர்தல் முடிவு வெளியாகியிருக்கும் நிலையில், அமைச்சர் வைத்தியலிங்கத்தை தோற்கடித்து வெற்றிக்கனியை பறித்திருக்கிறார் ராமச்சந்திரன்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளரான ராஜ்குமார் ஆதரவாளர்கள், “அவசரப்பட்டு அண்ணன் விலகிட்டாரே…! ஜெயிக்கிற தொகுதியை வேண்டாம் என்று விட்டுவிட்டு, தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டாரே அண்ணன் “ என்று இப்போது புலம்புகிறார்கள்.

 

 

கார்ட்டூன் கேலரி