சென்னை:

மிழகத்தில் இன்று (09.05.2020) முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தர விட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. 40 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இதனால் கொரோனா நோய்த்தொற்று பரவும் சூழல் நிலவியது. இந்நிலையில் இதனை காரணம் காட்டி தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை முடிவில், மதுக்கடைகளை மூடுமாறும், ஆன் லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்ளுமாறும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு படி , இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.