தயாரிப்பாளர் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு: உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை:

யாரிப்பாளர் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற  சென்ன  உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும்,  அனைத்து உறுப்பினர்களும் சங்கத்திற்குள் நுழைய அனுமதி உள்ளது என்ற நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரண மாக இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தலைவர் விஷால் செயல்படுவதாக கூறி, ஜே.கே.ரித்திஷ் தலைமையில் ஒரு தரப்பு தயாரிப்பாளர்கள்  நேற்று முன்தினம்  தேனாம்பேட்டை மற்றும் அண்ணா சலையில் உள்ள சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்ற விஷால் மற்றும் அவரது ஆதரவு தரப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.  காவல்துறையினரால் அங்கிருந்து அகற்றப் பட்டு மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக   விஷால் தரப்பை சேர்ந்த உறுப்பினர் அன்புதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கின் விசாரணையின்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள ஆவணங்களை கையாள மாடோம் என விஷால் தரப்பினர் உறுதிமொழி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மனற்ம், சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் மற்றும் வருவாய் கோட்டாசியர் அகற்றி விடவும், சங்க கட்டிடத்தில் அமல்படுத்தப்பட்ட பிரிவு 145-ஐ விலக்கிக் கொள்ளவும் உத்தரவிட்டனர்.

விசாரணையின்போது,  தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதற்காக 145 பிரிவை கையாளப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த பிரச்னையில் ஏன் போலீஸ் தலையிட வேண்டும் என்றும் காவல்துறையை சாடினர்.

கார்ட்டூன் கேலரி