முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், ராஜ்யசபாவில் மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கை மற்றி தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ளார். இது அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வி, திட்டமிடப்பட்ட கொள்ளை என்று வர்ணித்துள்ளார்.

manmohansingh

ரூபாய் நோட்டுகள் மீதான தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் முடங்கியிருந்த நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இன்றும் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையும் நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர், கூடிய கூட்டத்தின் போது, முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

[embedyt] http://www.youtube.com/watch?v=aWq1NIrAfXU[/embedyt]
முன்னாள் பிரதமர் மன்மொகன் சிங் பேசிய முழு வீடியோ

அப்பொது பேசிய மன்மோகன் சிங், “ரூபாய் நோட்டு தடை செய்ததற்கான நோக்கத்தை இங்கு யாரும் விமர்ச்சிக்கவில்லை, நோக்கம் சரியானதாக இருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்திய விதம் ஒரு வரலாற்றுப்பிழை. இதன் விளைவாக நாட்டின் வளர்ச்சி விகிதம் 2% கீழே இறங்கப் போவது உறுதி.
அதுமட்டுமல்ல, மக்கள் வங்கியில் உள்ள தங்கள் பணத்தை தாங்கள் எடுக்கவே அனுமதிக்கப்படாத நிலை என்பது கடும் கண்டணத்துக்கு உரியது. ஒரு திட்டம் என்றால் அதை செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளது. அதைவிடுத்து நாட்டின் சிறு தொழில்கள், விவசாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அத்தனையையும் முடக்கித்தான் இதை நிறைவேற்ற வேண்டுமென்பதில்லை.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 50 நாட்களில் நிலைமை சீரடையும் என பிரதரம் கேட்டிருக்கிறார். இந்த காலகட்டம் மிகவும் குறைவானது. மோசமான நிர்வாகத்திற்கு நமது ரிசர்வ் வங்கி உதாரணமாக அமைந்துள்ளது” என்று பேசிய மன்மோகன்சிங், “ரூபாய் நோட்டு தடையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதமர் மோடி உதவுவார் என்று நம்புகிறேன்” என்றார்.
மன்மோகன்சிங் முன்னாள் இந்திய பிரதமர் மட்டுமல்ல, அவர் முன்னாள் நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர், மற்றும் பொருளாதாரத்துறை நிபுணருமாவார்.