சென்னை,

டுத்த மாதம் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமைம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று அரசுக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு கூறி உள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முறையீடு செய்தார்.

அப்போது, அசல் வாகன ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் புதிய ஓட்டுநர் உரிமம் எடுப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும், மேலும் தாமதம் ஏற்படும் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்த வழக்கில்,  செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்த வழக்கை,  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை ஏற்க மறுத்த  உயர்நீதிமன்றம், வழக்கு எப்போது பட்டியலிடப்படுகிறதோ அப்போது விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.