அதிர வைக்கும் ‘இமைக்கா நொடிகள்’ ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்….!

ஒரு சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்து வெளியான படம் ‘இமைக்கா நோடிகள்’.

இத்திரைப்படத்தின் வெற்றிக்கு இசை மிகப் பெரிய பக்கபலமாக அமைந்திருந்தது. ஹிப்ஹாப் தமிழா இசைத்துள்ள இந்தப் படத்தின் பி.ஜி.எம். மற்றும் பாடல்கள் வேற லெவர் என்று ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது அனைத்து ரசிகர்களுக்கும் ஆச்சரியப்படும்விதமாக, இப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியிடப்பட்டுள்ளது, இதில் திரைப்படத்தின் 10 பிஜிஎம்களும் இடம்பெற்றுள்ளன.