ஒடிசா: பாதுகாப்பு படை அதிரடி தாக்குதலில் 18 மாவோயிஸ்டுகள் பலி!

மால்கான்கிரி,

டிசாவில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்டுகள்  கொல்லப்பட்டனர். இரண்டு போலீசாரும் காயமடைந்தனர்.

ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலால் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு  ஆந்திர பிரதேசம் – ஒடிசா  இருமாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்ட்களை தேடும் வேட்டையில்ஈடுபட்டனர்.

அப்போது மால்கான்கிரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவியில் இருந்த மாவோயிஸ்ட்கள்  முகாமில்  மாவோயிஸ்ட்டுகளின் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.  அந்த சமயம் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.  நேற்று இரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

odissa-1

கூட்டத்தில் சுமார் 50-60 மாவோயிஸ்ட்கள் கலந்துகொண்டிருப்பார்கள்  என்றும்,  அதில் 18 பேர் பாதுகாப்பு படையினரின் தாக்குதலால் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் மூன்று ஏ.கே. 47 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ரகத்தை சேர்ந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மால்கான்கிரி மாவட்டம் மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். மாவோயிஸ்டுகளின் எதிர் தாக்குதலில்  மூன்று போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த தகவலை அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராகுல் தேவ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.