ஒரிசா : சட்டப்பேரவை இடைத்தேர்தல் திடீர் ஒத்தி வைப்பு

புவனேஸ்வர்

ரிசாவில் பிப்லி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 16க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் பிப்லி சட்டப்பேரவை தொகுதி அமைந்துள்ளது.  அந்த தொகுதியில் வரும் மே மாதம் 13 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   இதையொட்டி அரசியல் கட்சியினரும், மக்களும் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் அதே தினத்தன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி பிப்லி சட்டப்பேரவை இடைத் தேர்தலை  வேறொரு தினத்துக்கு தள்ளி வைக்குமாறு இஸ்லாமிய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன.  அந்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

ஒரிசா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மே மாதம் 13 ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதால் அந்த தினத்தன்று நடக்க இருந்த பிப்லி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் மே 16 அன்று மாற்றப்படுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 19 அன்று நடைபெற உள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.