ஒடிசா: ஒன்றரை மாதத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட சிசுக்கள் பரிதாப மரணம்!

ஒடிசா,

டந்த ஒன்றரை மாதங்களில் மட்டும்  ஓடிசாவில் உள்ள மல்கன்கிரி மாவட்ட  மலைப்பகுதியில்  நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

இந்த அந்த பகுதி மக்களையும், உலக மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மல்கன்கிரி மாவட்ட எல்லை பகுதியில் பெரும்பாலும் அதிவாசி மக்களே வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒன்றரை மாவட்டத்தில்  300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

அடிப்படை சுகாதாதர வசதி இல்லை… மருத்துவ வசதி இல்லை… இதுதான் குழந்தைகள் கொத்துக்கொத்தாக மரணமடைய காரணம்” என்கின்றனர்.

மல்கன்கிரி கிராமத்தில் பரவி வரும் ’ஜப்பான் மூளையழற்சி’ (Encephlities) என்னும் ஒரு வகை மூளை யைத் தாக்கும் நோயால், நூற்றுக்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர் என்று ஒரு தகவல் கூறுகிறது. மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜாப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் எனப்படும் இந்த வைரஸ் நோய் கொசுக்களி னால்  பரவிவருகிறது என்று கூறுகின்றனர்.

baby-odissa

மாநில அரசு அதிகாரிகளோ, “விஷ மரம் ஒன்றின் விதைகளை குழந்தைகள் தின்றதே குழந்தைகள் இறக்கக் காரணம்” என்கிறார்கள்.

அதே நேரம் மனித உரிமை அமைப்பினரோ, “மத்திய மாநில அரசுகள் இங்கு வாழும் பூர்வகுடி மக்களான மலைவாழ் மக்கள் பற்றி அக்கறை கொள்வதே இல்லை. மலைப்பகுதியில் உள்ள கனிம வளங்களை கூறுபோட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதிலேயே குறியாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதைத் தடுக்க போராடும் இப்பகுதி ஆதிவாசி மக்களை, நக்சலைட்டுகள் என்று சொல்லி அரசு கொன்று குவிக்கிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் இப்படி 30 ஆதிவாசி மக்கள் போலி மோதல்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

இன்னொரு பக்கம், உயிருக்கு போராடும் குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை கூட செய்து தராமல், அவர்களது மரணத்துக்குக் காரணமாக மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன. இதன் காரணமாக மலைவாழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இனப்படுகொலையை செய்து வருகின்றன” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனரே தவிர, குழந்தைகள் சாவுக்கான காரணத்தை கண்டு பிடித்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் வேண்டுகோள்.

ஆனால், ஒரு  மாவட்டத்தில் இப்படி நூற்றுக்கணக்கான குழந்தைகள் பரிதாப மரணம் அடைவது குறித்து, இதுவரை எந்தவொரு ஊடகமும் முயற்சி எடுக்கவில்லை என்பது மற்றுமொரு சோகமாகும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: dies, india, More than, odissa, one and half month, orissa, three hundred babies, இந்தியா, ஒடிசா, ஒன்றரை, சிசுக்கள், பரிதாப மரணம்!, மாதத்தில், முன்னூறுக்கும், மேற்பட்ட
-=-