ஒடிசா: கர்ப்பிணி மனைவியை பிரசவத்துக்காக தோளில் சுமந்துசென்ற கணவன்!

கன்ஷாரிகால்:

டிசாவில் கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்றார் கணவர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

odissa

ஒடிசாவில் கணவர் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாவட்டம் கன்ஷாரிகால கிராமத்தை சேர்நதவர் பங்காரி பிரஷ்க். திருமண மாண இளம்பெண் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். சம்பவத்தன்று பிரஷ்கவுக்கு திடீரென வயிற்று வலி வந்துள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் ச தொலைவில் உள்ள  சுகாதார மையத்திற்கு அழைத்து செல்ல 108 சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

மனைவியின் வேதனையை பார்த்து கண்ணீர்விட்ட கணவர், சம்பாரு பிரஷக், தனது மனைவியை அலெக்காக தூக்கி தோளில் வைத்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

இரண்டு மணிநேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ், கர்ப்பிணி மனைவியை கணவர் தூக்கி வந்துகொண்டிருந்ததை பார்த்து அவரிடம் இருந்து கர்ப்பிண் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் அவரது தனது மனைவியை தோளில் தூக்கி சென்றது பார்த்தவர்கள் அனைவருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் புகைப்படத்துடன் வெளியாகி அம்மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதுபோல் ஒரு சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றது. தனது கர்ப்பிணி  மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்பலன்ஸ் வர தாமதமானதால், அந்த பெண்ணின் கணவரும், உறவினரும் சேர்ந்து, ஒரு பெரிய கம்பில் துணியை தொட்டில் போல் கட்டி தூக்கி சென்றது பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.