மோடி அளித்த வாக்குறுதிகளை நினைவு படுத்த இளைஞர் நடை பயணம்

க்ரா

ரிசா மாநிலத்தில் பல வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றாத மோடிக்கு நினைவு படுத்த இளைஞர் 1350 தூரம் நடைபயணம் சென்றுள்ளார்.

ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் முக்திகாண்ட்   இவர் ரோர்கேலா பகுதியை சேர்ந்தவர்.   கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ரோர்கேலா பகுதி மக்களுக்கு பல திட்டங்களை நடத்துவதாக வாக்களித்தார்.  அதன் பிறகு அவர் அதை நிறைவேற்றவில்லை.  அதை மோடிக்கு நினைவு படுத்த முக்திகாண்ட் நடைபயணம் மேற்கொண்டார்.

மருத்துவமனையில் முக்திகாண்ட்

இதுகுறித்து முக்திகண்ட்,”ஒரிசா மாநிலத்துக்கு கடந்த 2015ஆம் ஆண்டு வந்த பிரதமர் மோடி எங்கள் பகுதியில் உள்ள இஷ்பாட் மருத்துவமனைக்கு பல வசதிகள் செய்து தரப்படும் எனவும், ப்ராஹ்மன் பாலத்தின் பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் வாக்குறுதிகள் அளித்தார்.  மேலும் பல புதிய நலத் திட்டங்களையும் அவர் அறிவித்தார்.   ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த அடிப்படை வசதிகளும் குறைந்துள்ளது.   இதனால் பிரதமருக்கு அவர் அளிக்க வாக்குறுதிகளை நினைவு படுத்த நான் தேசியக் கொடியை கையில் ஏந்தி எனது நடை பயணத்தை தொடங்கினேன்.   சுமார் 1350 கி மீ நடந்து சென்ற நான் ஆக்ரா நெடுஞ்சாலையில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் உள்ளேன்.  உடல் நலம் தேறியதும் எனது பயணத்தை தொடர்வேன்” எனக் கூறி உள்ளார்.