சிறுமி மீது பலாத்கார முயற்சி : ஆதரவற்றோர் இல்ல உரிமையாளர் கைது

தராபாத்

தரவற்றோர் இல்லத்திலுள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத் நகரில் மாதவராவ் என்பவர் ஆதரவற்றோருக்காக ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வந்தார்.  அந்த இல்லத்தில் வசித்து வந்தவரிகளில் ஒருவரான 14 வயது சிறுமி (பெயர் தெரிவிக்கப்படவில்லை)  அவர் மேல் போலிசில் புகார் பதிந்துள்ளார்.

அதில் மாதவராவ் தன்னை அவருடைய அறைக்கு அடிக்கடி அழைப்பதாகவும்,  பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

அவர் மேல் மைனர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகவும் சிறு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பலாத்காரத்துக்கு முயன்றதாகவும் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.   நாளை மாதவராவ் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.