கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு இடையே சில பிரச்னைகள் நிலவி வருகின்றன.

இதன் காரணமாக சில தயாரிப்பாளர் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான ‘ஒரு பக்ககதை’ நேரடியாக ஜீ5 தளத்தில் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் .