டென்னிஸ் தரவரிசை – 3வது இடத்திற்கு முன்னேறிய ஜப்பானின் ஒசாகா!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, ஜப்பான் வீராங்கனை ஒசாகா, உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதற்கு முன்னர், அவர் 9வது இடத்தில் இருந்தார். இத்தரவரிசை பட்டியலை டபிள்யூடிஏ அமைப்பு வெளியிட்டுள்ளது.

யு.எஸ்.ஓபனில் இரண்டாமிடம் பிடித்த பெலாரஸ் வீராங்கனை அஸரன்கா, மொத்தம் 13 இடங்கள் முன்னேறி 14வது இடத்திற்கு முன்னேறினார்.

இத்தொடரில், அரையிறுதி வரை முன்னேறிய அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி, 16 இடங்கள் முன்னேறி, 25வது இடத்திற்கு வந்துள்ளார்.

ஆண்கள் பட்டியலைப் பொறுத்தவரை, ஜோகோவிக்(செர்பியா), ரபேல் நாடல்(ஸ்பெயின்), டொமினிக் தியம்(ஆஸ்திரியா), ரோஜர் பெடரர்(சுவிட்சர்லாந்து) மற்றும் மெட்வேடவ்(ரஷ்யா) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

 

You may have missed