Random image

அமெரிக்க ஓபன்: இறுதி சுற்றில் செரீனாவை எதிர்கொள்ளும் ஜப்பான் வீராங்கனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றுக்கு முதல் முறையாக ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா தகுதி பெற்றுள்ளார். இறுதி பொட்டியில் இவர் 6 முறை சாம்பியனான முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்சை எதிர்த்து விளையாட உள்ளார்.

07osaka

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீசை எதிர்த்து விளையாடினார். போட்டியின் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய ஒசாகா 6-2,6-4 என்ற நேர் செட்களில் மேடிசனை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இதையடுத்து அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 20வயதே நிரம்பிய நயோமி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதி போட்டியில், 6 முறை சாம்பியனான முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்த்து ஒசாகா களமிறங்க உள்ளார். குழந்தை பிறந்த பிறகு இந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்கும் செரீனா வெற்றிப்பெறும் முனைப்போடு விளையாடி வருகிறார். அவர் ஒசாகாவிற்கு மிகுந்த சவாலான போட்டியாளராகவே உள்ளார்.

இந்த வெற்றிக்குறித்து ஒசாகா கூறுகையில், “ இந்த தருணம் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. செரீனாவுடன் விளையாடுவதை நான் விரும்புகிறேன். அவர் மீது எனக்கு அன்பு உள்ளது. அனைவரும் மீதும் அன்பு வைத்திருக்கிறேன். செரீனாவை ஒப்பிட்டால் நான் ஒரு குழந்தை, அவருடன் கிராண்ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றில் மோதுவது என்பது எனக்கு ஒரு கனவாக தான் இருந்தது. தற்போது அது நடந்துள்ளது. அடுத்த போட்டியில் அவரை எனக்கு எதிரியாக நினைக்க மாட்டேன், என்னை எதிர்த்து விளையாடும் ஒரு போட்டியாளாராகவே கருதுவேன், மேடிசனை எதிர்த்து நான் விளையாடாடது மிகுந்த கவலையை அளிக்கிறது. ஏனெனில் அவர் ஒரு நல்ல வீராங்கனை..” என்று உணர்ச்சி வசப்பட கூறினார்.

இந்நிலையில் செரீனா மற்றும் ஒசாகா பங்கேற்கும் இறுதி போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.