லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணிக்கு  துவங்கிய இந்த விழா நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார்.

உலகளவில் பல படங்களும் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டது.

த ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஆஸ்கர் விருதுகள்  பெற்றது.

கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் பெற்றது.  பிளேட் ரன்னர் 2049, டார்க்கஸ்ட் ஹார், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி உள்ளிட்ட படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளன.

 

 

ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம்:

சிறந்த படம் – த ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த நடிகர் – கேரி ஓல்டுமேன் (டார்க்ஸ்ட் ஹார்)

சிறந்த நடிகை – பிரான்சஸ் மிக்டார்மண்ட் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)

சிறந்த இயக்கம் – கில்லர்மோ டெல் டோரோ (த ஷேப் ஆப் வாட்டர்)

சிறந்த பாடல் – கோகோ (ரிமம்பர் மி)

சிறந்த இசை – த ஷேப் ஆப் வாட்டர் (அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்)

சிறந்த ஒளிப்பதிவு – பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் ஏ.டெக்கின்ஸ்)

சிறந்த திரைக்கதை – கெட் அவுட் (ஜோர்டன் பீல்)

சிறந்த தழுவல் திரைக்கதை – கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் இவோரி)

சிறந்த லைவ் ஆக்‌ஷன் திரைப்படம் – த சைலன்ட் சைல்ட் (கிறிஸ் ஓவர்டன், ராச்சல் ஷென்டன்)

சிறந்த ஆவண குறும்படம் – ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் த 405 (ப்ராங்க் ஸ்டிப்பெல்)

சிறந்த படத்தொகுப்பு – டங்கிர்க் (லீ ஸ்மித்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – பிளேட் ரன்னர் 2049 (ஜான் நெல்சன், கெர்டு நெஃப்சர், பால் லாம்பர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர்.ஹுவர்)

சிறந்த துணை நடிகர் – சாம் ராக்வெல் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)

சிறந்த துணை நடிகை – ஆலிசன் ஜேனி (ஐ, டோன்யா)

சிறந்த வெளிநாட்டு படம் – எ பென்டாஸ்டிக் வுமன் (சிலி)

சிறந்த அனிமேஷன் படம் – கோகோ (லீ அன்கிர்ச், டார்லா கே.ஆன்டர்சன்)

சிறந்த அனிமேஷன் குறும்படம் – டியர் பாஸ்கட்பால் (க்ளென் கீன், கோப் ப்ரயண்ட்)

 

 

தயாரிப்பு வடிவமைப்பு – தி ஷேப் ஆஃப் வாட்டர்

ஒலித்தொகுப்பு – டங்கிர்க் (ரிச்சர்டு கிங், அலெக்ஸ் கிப்சன்)

ஒலி இணைப்பு – டங்கிர்க் (கடரெக், க்ரே, மார்க்)

சிறந்த ஆவணப்படம் – ஐகரஸ் (பிரயன் போகல், டேன் கோகன்)

ஆடை வடிவமைப்பு – பாண்டம் த்ரெட் (மார்க் ப்ரிட்ஜஸ்)

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – டார்க்கஸ்ட் ஹார் (கசுரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லக்கி சிபிக்)