ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குட்டி ஹீரோ!


லாஸ் ஏஞ்சல்ஸ்,

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்சில் உள்ள கண்ணாடி மாளிகையான டால்பி திரையரங்கில் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து  திரையுலக பிரபலங்கள் லாஸ் ஏஞ்செல்சில் குவிந்து உள்ளனர். அவர்களுக்கிடை யில் ‘லயன்’ படத்தில் நடித்த குட்டி நாயகன் சன்னி பவர் கலந்துகொண்டார்.

இது அங்கு வந்திருந்த திரையுலக ஜாம்பவான்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற பிரசித்தி பெற்ற விழாக்களில் கலந்துகொள்வது திறமை மட்டுமே முக்கியம், வயது கிடையாது என்பதை உணர்த்தியது  அவரது வருகை.

அங்கு வந்துள்ள திரையுலக ஜாம்பவான்களிடம் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டும்,  விழா அரங்கில் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டு, ஹாலிவுட் திரைநட்சத்திரங்களின் செல்லப்பிள்ளையாய், விழா அரங்கில் வலம்  வருகிறார் குழந்தை நட்சத்திரம் சன்னி பவர்.

விழாவில் பங்கேற்றது குறித்து, தனது அனுபவங்களை புகைப்படங்களாகவும் பதிவு செய்து வருகிறதார் குட்டி நட்சத்திரம் சன்னி பவர்.