ஆஸ்கர் விருது: விழாவில் மின்னிய பிரியங்கா!

லாஸ் ஏஞ்சல்,

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்று வரும்  89வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமர்க்களமாக வந்து உலக திரையுலக ஜாம்பவான்களின் பார்வையை தன்மீது திருப்பினார்.

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய கதாநாயகியான  பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். இவர் தற்போது பே வாட்ச் எனப்படும் ஹாலிவுட் தொடரில்  நடித்து வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா வெள்ளி நிறத்தில் ஆடையை அணிந்து சிகப்பு கம்பள வரவேற்பில் ஒய்யாரமாக நடந்து வந்தார். அவரது உடை அங்கிருந்த லைட்டின் வெளிச்சத்தில் மின்னியது.

அவரது அழகையும், உடையையும் பார்த்த ஹாலிவுட் பிரபலங்கள் ‘ஆ….’வென வாயை பிளந்தனர்.

ஏற்கனவே பிரியங்காவின் நடிப்பை பார்த்து வியந்துள்ள ஹாலிவுட் பிரபலங்கள்  அவருக்கு தங்களுடைய  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதன் காரணமாக கூடிய விரைவில் ஹாலிவுட் படத்தில் தோன்றுவார் பிரியங்கா சோப்ரா என எதிர்பார்க்கப்படுகிறது.