பாராசைட் என்ற கொரிய படம், சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

விஜய், ரம்பா நடிப்பில் 1999ம் ஆண்டில் வெளியான மின்சாரக்கண்ணா படத்தின் கதையை, பாரசைட் படம் ஒத்திருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது .

பொதுவாக ஹாலிவுட் படத்தையும், கொரியன் படத்தையும் பார்த்து தமிழ் பட இயக்குனர்கள் கதையை காப்பி அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தான் வரும் .தற்போது அப்படியே உல்டாவாக ஒரு புகார் எழுந்திருக்கிறது.

இதுதொடர்பாக, பாராசைட் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடருவீர்களா? என, கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது,மின்சார கண்ணா படக் குழுவினருக்கே, ஆஸ்கர் கிடைத்தது போல் மகிழ்கிறேன். படத்தின் உரிமை, தேனப்பனிடம் உள்ளது. அவர் தான், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும், என்று கூறியுள்ளார் .
இதுபற்றி தேனப்பன் தரப்பில் கூறும்போது,’வழக்கு தொடர வேண்டுமென்றால் அதற்கென பிரத்யேமாக வெளிநாட்டு வக்கீல் ஒருவரை நியமிக்க வேண்டும். இதுபற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.