லாஸ் ஏஞ்சல்ஸ் :

90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துகொண்டிருக்கிறது.

 

சிறந்த திரைப்படம்,சிறந்த இயக்குனர் என மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருது அளிக்கப்படுகிறது.

திஷே ப் ஆப் வாட்டர் என்ற திரைப்படம் 13 பிரிவுகளின் கீழும்,   கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் என்ற திரைப்படம் 8 பிரிவுகளின் கீழும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசொளரி என்ற படம் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டி.வி., தொகுப்பாளர் ஜிம்மிகெம்மல் இரண்டாவது முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சிறந்த துணை நடிகராக சாம் ராக்வெல் தேர்வு செய்யப்பட்டார். மேலும் கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாம் உலகப்போர் பற்றிய டன்கிர்க் படம் சிறந்தஒலிக்கலவை,சவுண்ட் எடிட்டிங் உள்ளிட்ட  மூன்று விருதுகளை வென்றுள்ளது.