ஆஸ்கார்: தவறாக கொடுக்கப்பட்ட விருது! திருப்பி அளித்த இயக்குநர்!

 

லாஸ்ஏஞ்சல்ஸ்:

ஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது.  சிறந்த படதுக்கான விருது லா லா லேண்ட் படத்துக்கு வழங்கப்படுமா அல்லது மூன் லைட் படத்துக்கு வழங்கப்படுமா என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளரின் சொதப்பல் அறிவிப்பு காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா  நடைபெற்று வருகிறது.

ஆஸ்கரில் சிறந்த படமாக மூன் லைட் தேர்வு செய்யப்பட்டது ஆனால், தவறுதலாக லா லா லேண்ட் வெற்றி பெற்றதாக நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

ஆனால் விருதை பெற்றுக்கொண்ட  லாலா லேண்ட் டைரக்டர் விருதுடன் வழங்கப்படும் அத்தாட்சி கடிதத்தை பார்த்தபோது, அதில், சிறந்த படமாக மூன் லைட் தேர்வு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

உடனே, அவர் மூன் லைட் படத்தின் இயக்குனரை அழைத்து, சிறந்த படத்திற்கான விருதை அவருக்கு கொடுத்தார். இதன் காரணமாக  விழா நிகழ்ச்சியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சி தொகுப்பாளரான வாரன் பெட்டி தவறுதலாக படத்தின் பெயரை வாசித்ததால் இந்த குழறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

லா லா லேண்ட் திரைப்படத்திற்கு மட்டும் 5 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது மான்செஸ்டர் பை த சீ படத்துக்காக கென்னெத் லோனர்கன் வென்றார்.

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது லா லா லேண்ட் படத்துக்காக டேமியன் சாஜெல்லேவுக்கு வழங்கப்பட்டது

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது மான்செஸ்டர் பை தி சீ திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது

24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகிறது