புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டுக்கான திரைப்பட விழா டிசம்பர் 15-ம் தேதி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் தேர்வாகி உள்ளது .

சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குநர் பார்த்திபனுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரும் 15-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்குகிறார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் விழாவில் தரப்படவுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.