ஆஸ்கர் விருது இறுதி பட்டியலிலும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இடம்பெறவில்லை; திறமைக்கு இது தான் பரிசா…?

செப்டம்பர் 20-ம் தேதி பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’ திரைக்கு வந்தது .படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படத்திற்கு அனைத்து துறையிலிருந்தும் பாராட்டுக்கள் வந்து குவிந்தன .

இந்தப் படத்துக்காக பல்வேறு விருதுகளையும் வென்று வருகிறார் பார்த்திபன். ஆனால் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு இந்த படம் பரிந்துரை செய்யவில்லை.

இதனால், நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு தன் ‘ஒத்த செருப்பு’ படத்தைக் கொண்டு சென்றார் பார்த்திபன். ஆனால் நேற்றிரவு (ஜனவரி 13) ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான இறுதிப் பட்டியலில் எந்தவொரு விருதிலும் ‘ஒத்த செருப்பு’ படம் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக பார்த்திபன், “நாம், ஆஸ்கர் விருது இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை என்றாலும், பெறுவோம் நாளை என்ற நம்பிக்கையுடன் இன்றைக் கடப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்

கார்ட்டூன் கேலரி