பெய்ஜிங்: தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுக்கு கொடுக்கப்பட்டுவரும் பெரியளவிலான கவனத்தினால், வேறுபல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்பில் நிற்கும் நோயாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது.
இந்த நிலை உலகம் முழுவதும் பல நாடுகளில் இருப்பதாக கூறப்படுகிறது. உண்மை நிலை இப்படி இருப்பதால், கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் உண்மையிலேயே எப்படி கணக்கிடப்படுகிறது என்ற விவாதம் வலுப்பெற்றுள்ளது.
சிக்கலான மற்றும் வினோதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர், நீண்டகால நோய்களால் உள்ளிட்டோருக்கு, கொரோனா கட்டுப்பாடுகளால் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால், அவர்களின் பலர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் புறக்கணிப்பு, நம்மை அறியாமலேயே நடைபெறுகிறது. மேற்கண்ட பிரச்சினைகள் தொடர்பாக சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், பல நாட்களாக பணிசெய்ய முடியாமல் உள்ளனர். கொரோனா தொடர்பாக முழு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அந்த மருத்துவர்களுக்கு வேலையிருப்பதில்லை.
தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை அடித்துவருகிறது. வரும் காலங்களில், மூன்றாவது அலையும் இருக்கலாம். ஊரடங்கு நடவடிக்கையும் தொடரலாம். எனவே, கொரோனா சம்பந்தப்படாத வேறுபல கொடிய நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, சரியான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது.