பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’.இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

இந்தியாவிலிருந்து ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு தேர்வாகாததை கண்டு துவளாமல் இந்தியாவிலிருந்து அல்லாமல் நேரடியாக ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பும் முயற்சியில் கையிலெடுத்து பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன்.

இந்நிலையில் கோல்டன் குளோப் விருதுப் போட்டிக்கான பரிசீலனைக்கு ‘ஒத்த செருப்பு’ எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தியாவிலிருந்து ‘ஒத்த செருப்பு சைஸ் 7’, ‘டூலெட்’ ஆகிய தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளன.