ந்த காலத்து சந்திரலேகா படம் முதல் இந்தக் காலத்து ஷங்கர் படம் வரை பிரமாண்ட அரங்குகள் படத்தை பெரிய உயரத்துக்கு கொண்டு செல்லும். எம்.ஜி ஆர் படங்கள். டி.ராஜேந்தர் படங்கள் என்றால் பாடல் காட்சிகளுக்கு பிரமாண்ட வண்ண மயமான அரங்குகள் மலைப்பை ஏற்படுத்தும் இத்தனையும் தியேட்டரில் சென்று அந்த பெரிய திரையில் பார்க்கும்போது ஏற்படும் ஆச்சரியங்கள்.


சமீபகாலமாக சினிமாகையடக்க செல்போ னிலும், வீட்டு சுவரில் மாட்டப் பட்டிருக்கும் ஸ்மார்ட் டிவி அளவுக்கும் சுருங்கிவிட்டது. வருங்கால சினிமா இப்படித்தான் இருக்குமா என்று தெரியாது ஆனால் இதுபற்றி பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கர் என்ன சொல்கிறார்.
’தியேட்டரில் கிடைக்கும் ஒரு அனுபவம் ஒடிடி தளத்தில் ஒருபோதும் கிடைக்காது. ஆனால் என்னைப்பற்றி யோசிக்கிறேன், எதிர்காலம் ஒடிடி தளம்தான் என்றால் என்னவிதாமான அம்சமுள்ள படத்தை நான் இயக்குவது. ஒடிடியோ, தியேட்டரோ எதுவாக இருந்தாலும் என்னுடைய படம் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கும் வகையிலான படமாகத் தான் இருக்கும்’என்றார் ஷங்கர்.
ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகத்தை அதிக பொருட்செல வில் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.