ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை என்று தனது ட்விட்டர் பதிவில் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

“ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளடக்கங்கள் சில நாட்களில் சலிப்பூட்டுகின்றன. எல்லா தொடர்களும் ஒரே இருண்ட கதைகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைப் பார்த்த பிறகு அவர்கள் பின்பற்றும் முறை பழையதாகவும், கணித்துவிடக்கூடியதாகவும் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை. கலை என்பது இப்போது ஒரு வியாபாரச் சரக்காகி விட்டது” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பி.சி.ஸ்ரீராம்.

இதனிடையே, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.