ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம் ….!

காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் க/பெ.ரணசிங்கம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் இத்திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.

அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தை ஒருமுறை பார்க்க ரூ.199 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு தனது எதிர்ப்பைதனது ட்விட்டர் பதிவில் “ஓடிடி தளத்தில் எந்த ஒரு படத்தையும் நேரடியாகப் பார்க்க ரூ.199 கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது. மாதம் சந்தா தொகை கட்டியதன் மூலம் இலவசமாக படம் பார்க்கவே நமது பார்வையாளர்கள் தயாராகியுள்ளனர் என பதிவிட்டுள்ளார் .