சென்னை:

ட்டப்பிடாரம் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி. இதன் காரணமாக அங்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

கடந்த  சட்டமன்ற தேர்தலின்போத  ஓட்டப்பிடாரம் தொகுதியில்  புதிய தமிழகம் கட்சி வேட்பாளர், கிருஷ்ணசாமி, போட்டியிட்டார். அவரை எதிர்த்து  அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் போட்டியிட்டார்.  இதில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார். அவரது  வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. தற்போது, தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவித்தது. தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், வழக்கு காரணமாக ஓட்டப்பிடாரம், திருப்பரங் குன்றம், அரவக்குறிச்சி தவிர மீதமுள்ள  18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் வகையில், தனது வழக்கை வாபஸ் பெற்றார் டாக்டர் கிருஷ்ணசாமி. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த வாபஸ் பெற அனுமதி கோரி மனுவை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இதுகுறித்து  உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. அதுபோல, திருப்பரங்குன்றம் தொகுதியில் வழக்கு தொடர்ந்த திமுக வேட்பாளர் சரவணனும் வழக்கை வாபஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக ஓட்டப்பிடாரத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன்  தேர்தல் ஆணையம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.