காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் குடும்பம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கும்! கார்த்தி சிதம்பரம்

டில்லி:

காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் குடும்பம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று சிறைச்சாலை யில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் மகன்  கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கலத்தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து, சிதம்பரம் சார்பாக அவரது  குடும்பத்தினர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  Pசோனியா காந்தி, மன்மோகன் சிங்கும் என்னை சந்தித்ததை கவுரவமாக கருதுகிறேன். காங்கிரஸ் கட்சி தைரியமாகவும், வலிமையாகவும் இருக்கும் வரையில், நானும் தைரியமாகவும் வலிமையாகவும் இருப்பேன் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் ப.சிதம் பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்தித்து பேசியது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது; இதற்கு எங்கள் குடும்பம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று கூறி உள்ளார்.

 

You may have missed