முதல் இலக்கு இறுதிப்போட்டி, இரண்டாம் இலக்கு கோப்பை: வீராங்கனை வேதா

மெல்போர்ன்: இறுதிப்போட்டிக்கு நினைத்தபடி முன்னேறிவிட்டதாகவும், அடுத்ததாக கோப்பை வெல்வதே இலக்கு எனவும் கூறியுள்ளார் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி.

அவர் கூறியுள்ளதாவது; இந்த டி-20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, இறுதிப்போட்டிக்கு எப்படியேனும் முன்னேற வேண்டுமென்பதுவே இலக்காக இருந்தது.

தற்போது, அந்த லட்சியம் நிறைவேறிவிட்டது. இந்திய அணியின் பக்கம் கொஞ்சம் அதிர்ஷ்டமும் உள்ளது. எனவே, அடுத்த டார்க்கெட் என்பது உலகக்கோப்பையை வெல்வதே.

காலநிலை என்பது நம் கைகளில் இல்லை. எனவே, ஒவ்வொரு போட்டியையும் வெல்வது மிக முக்கியமானது. இறுதிப்போட்டியில் இழப்பதென்பது மிகவும் வலி நிறைந்தது. எனவே, கவனமுடன் திட்டமிட்டு செயல்படுவோம்” என்றார்.

முதன்முறையாக பெண்கள் டி-20 உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, 4 முறை உலகக்கோப்பை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. இத்தொடரின் லீக் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.