ஸ்பெயின் மக்களின் துயரம் மாறும் – ரஃபேல் நடால் நம்பிக்கை…

மாட்ரிட்

                ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் முக்கிய விளையாட்டுத் திருவிழாக்கள் கொரோனா வைரஸால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

       “களிமண் தரையின் புலி” என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது 20ஆம் கிரான்ஸ்லாமை  கைப்பற்றுவார் எனும் ஆவல் டென்னிஸ் உலகில் பரபரப்பாகியுள்ளது. இச்சூழலில் பிரெஞ்சு ஓபன்   போட்டிகளும் மே மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.  கொரோனாத் தொற்றால் ஸ்பெயின் பெரும் உயிர்ச்சேதங்களைக் கண்டு வருகிறது. அவரவர் தங்களுக்குள் சமூக விலகலை கடைபிடிப்பதே இந்நோய்க்கு மிகச் சிறந்த தடுப்பு முறை என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

      இந்நிலையில் தனது நாட்டு மக்களுக்கு நடால் விடுத்துள்ள வேண்டுகோளில், “அனைவரும் சமூகவிலகலை கடைபிடித்து வீட்டிலேயே இருங்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு, தூய்மையை கடைபிடியுங்கள். உறவுகளை இழந்த துயரம் மிகுந்த இந்த நாட்களை நாம் நிச்சயம் கடந்து வருவோம்”  எனக் கூறியுள்ளார்.

      மேலும் தனக்கான உணவுகளை நடாலே சமைக்கும் வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: corona in spain, Frenchopen, Olympic, rafael nadal, Self isolation, tamil news patrikai dot com, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, ஒலிம்பிக் விளையாட்டு, களிமண் புலி, கொரோனா, டென்னிஸ், பிரெஞ்சு ஓபன்..., ரஃபேல் நடால், ஸ்பெயின்:
-=-