டில்லி:

காஃபி கிங் சித்தார்த்தா இந்திய காபி துறையின் மிகச் சிறந்த மனிதர் என்று  காஃபி துறை அஞ்சலி செய்தியில் கூறி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பிரபல காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா, கடன் மற்றும் வருமான வரி பிரச்சி காரணமாக, தனது  குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு கடிதம் எழுதி யிருந்த நிலையில், நேற்று திடீரென நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து, சிக்மகளூர் மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்பு நடத்தப்படுகிறது. சித்தார்த்தாவின் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இந்திய  காஃபி துறையின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், மிகச் சிறந்த மனித ரரான சித்தார்த்தா, காஃபி குறித்து, இந்தியர்களிடையே ஆர்வத்தைத் தூண்டுவதற்கு அவர் பொறுப்பேற்றார். அவர் ஒரு அழகான மற்றும் மென்மையான மனிதர். அவருடைய பணியை முன்னெடுத்துச் செல்ல அவருடைய ஆவி நமக்கு வழிகாட்டட்டும். இந்திய காபி துறையில் மிகச் சிறந்த மனிதருக்கு எங்கள் அஞ்சலி என்று தெரிவித்து உள்ளது.