சென்னை:

மிழகத்தில் தற்போதைய நிலையில் 37 மாவட்ங்கள் உள்ள நிலையில், 31 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக யாராவது நீதிமன்றத்தை நாடினால், தேர்தல் நடைபெறுவது கேள்விக்குறிதான்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்ஙகளாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே என்றும், மாநகராட்சி, நகராட்சிப் போன்ற நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

இந்த நிலையில், தற்போது அவரது அறிவிப்பில்  31 மாவட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 37 மாநிலங்கள் உள்ள நிலையில், 31 மாவட்ட உராட்சித் தலைவர், துணைத்தலைவர் பதவிகள் தேர்தல் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் புதியதாக 5 மாவட்ங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வார்டு வரையறைப் பணிகள்  தொடங்கப்படாத நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை  அறிவித்து உள்ளது சந்தேகத்தை ஏங்றபடுத்தி உள்ளது.

37 மாவட்டங்களுக்கு எப்படி 31 மாவட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.

தமிழகஅரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம் என்று வெளிப்படையாக கெத்து காட்டினாலும், உள்ளுக்குள் பயந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பாக ஏற்கனவே திமுக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், அரசின் கைப்பாவையாக உள்ள மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசின் ஆசைக்கேற்ப, தேர்தலை நிறுத்தும் நோக்கில்தான், இதுபோன்று ஒரு தவறான  அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலை நிறுத்த சதி செய்வதாக  அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.