சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா…

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், எண்ணிக்கை 13 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் மாளிகை உட்பட பல்வேறு மண்டலங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களாக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரை, 219 அதிகாரிகள், ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தொற்று கண்டறியப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப் பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும் நலமுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.