சோனியாகாந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது பைத்தியக்காரத்தனம்! ப.சிதம்பரம் கடும் சாடல்

டெல்லி:

சோனியாகாந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது, மத்தியஅரசின்  பைத்தியக்காரத்தனமான முடிவு என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார்

சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு முன்பு குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonai Gandhi), அவரது மகன் ராகுல் காந்தி (Rahul Gandhi) மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ராவிற்கு (Priyanka Gandhi) இனி மத்திய அரசின், ‘எஸ்பிஜி’ (SPG) பாதுகாப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,  இனி காந்தி குடும்பத்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்புதான் அளிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தனது குடும்பத்தினர் மூலம் தனது டிவிட்டர் பக்கத்தில், சோனியா காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பிஎஸ்ஜி பாதுகாப்பை வாபஸ் பெற்ற மத்தியஅரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மோடி அரசின் இந்த நடவடிக்கை பைத்தியக்காரத்தனம் என்றும், மூர்க்கத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: amit shah, amit shahs home, congress protests-, gandhis family, P. Chidambaram, SPG cover withdrawal, spg security, spg security dropped, SPG withdrawal, ‘Outrageous and mad decision’
-=-