பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர்  கமல்ஹாசன் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயிலெல்லாம் இருக்கு என்று சசிகலாவை கலாய்த்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நமீதா வெளியேறறப்பட்டார்.  இதையடுத்து  கமல்ஹாசனை சந்தித்த  நமீதா நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசினார். க போட்டியாளர்கள் குறித்தும் கருத்து தெரிவித்த அவர்,   ஓவியா மீது பலவித குற்றச்சாட்டுக்களை கூறினார்.

அபு்போத பிக்பாஸ் வீடு எப்படி இருந்தது என கமல்  கேட்டார்

அதற்கு  நமீதா, பிக்பாஸ் வீடு ஒரு ஃவைவ் ஸ்டார் ஜெயில் என்று பதில் அளித்தார்.

உடனே கமல், “இது அப்படி இல்லை. ஆனால் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில்லாம் இருக்கு என்று கிண்டலாக கூறி சிரித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளியான சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஐந்து அறைகள், செல்போன், ரோலிங் சேர், ஸ்பெஷல் கிட்சன், கட்டில், மெத்தை டிவி, என சொகுசாக இருப்பது குறித்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலாவுடன் சக கைதியான இளவரசியும்  சிறையிலிருந்து ஷாப்பிங் சென்ற வீடியோவும் வெளியானது.

இதை மனதில் வைத்துதாதன், சகிலாவை கமல் கலாய்த்தார்.