இந்திய ரயில்களில் டிக்கட் கிடைக்காமல் அவதிப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 10 லட்சம் என்று ரயில்யாத்ரி என்ற இணையதளத்தின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

raill

டிமாண்ட் – சப்ளை இடைவெளியால் ஏற்பட்ட பிரச்சனைதான் இது என்கிறது அந்த இணையதளம். டிக்கெட் கிடைக்காமல் ஏமாறுவோரின் விகிதம் தினமும் 13% ஆகும். பண்டிகை நாட்கள் உள்ளிட்ட முக்கிய காலங்களில் இது 19% வரை உயர்வது உண்டு.
தொலைதூர பயணத்துக்கு ரயில்தான் உகந்தது என்ற மக்களின் பொதுவான கருத்தே அனைவரும் ரயிலை தேர்ந்தெடுக்க காரணம். இந்த பிரச்சனையை ரயில்வே துறை உணராமல் இல்லை. இதற்கு ஒரே தீர்வு இன்னும் நிறைய ரயில்களை இயக்குவதுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஏற்கனவே அதிகப்படியான ரயில்களால் நெட்வொர்க் பிசியாக இருக்கும்போது மேலும் அதிக ரயில்களை இயக்குவது சாத்தியமில்லை என்கிறது ரெயில்யாத்ரி இணையதளம்.