உலகின் முதல் சிறந்த 2% விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்திலிருந்துஇடம் பெற்றுள்ளனர்

சென்னை:
லகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் குறைந்தது 100 பேர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ளனர் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி இதுவரை விஞ்ஞானிகள் தயாரித்த ஆவணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானிகள் தங்கள் முதல் மற்றும் சமீபத்திய ஆய்வு கட்டுரையை எப்போது வெளியிட்டார்கள் என்ற விவரத்தையும் இந்த அறிக்கையில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 36 பேராசிரியர்களுடன் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (IIT) முன்னிலை வகித்துள்ளது. இந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் விண்வெளி உயிர் தகவலியல், உயிர்மருத்துவப் பொறியியல், கட்டிடம் மற்றும் கட்டுமானம், ரசாயன பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், தொழில் துறை பொறியியல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ், இயந்திரப் பொறியியல் மற்றும் பரிமாற்றம், மருத்துவ மற்றும் உயிர் மூலக்கூறு வேதியியல், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம், நெட்வொர்க்கிங் மற்றும் தொலைத்தொடர்பு, செயல்பாட்டு ஆராய்ச்சி, உடல் வேதியியல் மற்றும் மின்னணு பொறியியல் ஆகிய தலைப்புகளின் கீழ் ஆவணங்களை வெளியிட்டு முதலிடத்தை பிடித்துள்ளனர்.

மேலும் இந்தப் பட்டியலில் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 7 விஞ்ஞானிகளும் அடங்கியுள்ளனர். அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் முறையே 8 மற்றும் 9 விஞ்ஞானிகளுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்கள் உள்ளது. தமிழக மத்திய பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் தலா 2 விஞ்ஞானிகளையும், பெரியார் பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் தலா 1 விஞ்ஞானியையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்களில் எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் சென்னை வளாகம் 3 விஞ்ஞானிகளுடன் உள்ளது, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு விஞ்ஞானியும், பாரத் உயர்கல்வி நிறுவனம் 4 விஞ்ஞானிகளுடனும், அமிர்தா ஸ்கூல் ஆஃப் என்ஜினியரிங்லிருந்து ஒரு விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளார்.

மேலும் இந்த பட்டியலில் சங்கர நேத்ராலயா, அரவிந்த் கண் பராமரிப்பு அமைப்பு போன்ற கண் மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் ஒரு விஞ்ஞானி மற்றும் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் 8 விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் பல்வேறு துறைகளில் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.