டில்லியில் விஷவாயு கசிவு: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்! பரபரப்பு

--

டில்லி,

டில்லியில் துல்லக்பாத் பகுதியில் உள்ள பள்ளி அருகே விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

வாயுக்கசிவு ஏற்பட்டதில்  மயக்கமடைந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடடினயாக அருகிலுள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லி உள்ள துல்லக்பாத் பகுதியில் உள்ள உறைவிட பள்ளியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் 7.45 மணி அளவில்  மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்தனர். அப்போது அருகிலிருந்த  கெமிக்கல் கண்டெய்னரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு அந்த பகுதியில் பரவியது.

கெமிக்கல் கண்டெய்னர்  கம்பெனி அருகே பள்ளி இருந்ததால், கண்டெய்னரில் இருந்து வெளியாக நச்சு வாயு  பள்ளி வளாகம் முழுவதும் பரவியது.

வாயு காரணமாக  கண், தொண்டை எரிச்சல் ஏற்பட்டு பாதிப்பு அடைந்தனர். மாணவர்கள் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டனர்.  தொடர்ந்து  அடுத்தடுத்து  மயக்கம் அடைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த  ஆசிரியர்கள் இதுகுறித்து  உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாணவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விஷவாயு கசிவு காரணமாக 110 மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

You may have missed