ஜெனிவா:

டந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில், ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரையில்லாத வகையில் அதிக அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவிக்கையில், புதிதாக கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் மூன்றில் இரண்டு பங்குயினர் குறிப்பிட்ட நான்கு நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 11 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 94 ஆயிரத்து 813 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 589 பேர் உயிரிழந்ததால், அதன் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே 19 லட்சத்து 76 ஆயிரத்து 348 பேர் உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய சூழலில் 27 லட்சத்து இரண்டாயிரத்து 22 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 1.5 மில்லியன் எண்னிகையுடன் அமெரிக்கா முதலிடத்திலும், இதை தொடர்ந்து ரஷ்யா, பிரேசில் மற்றும் பிரிட்டன் நாடுகள் இடம் பெற்றுள்ளன.