டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு 5வது நாளாக 14ஆயிரத்தை தாண்டி உள்ளது.  அதேவேளையில் நோய் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைய 4.5 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 14,476 ஆகவும் உள்ளது.

நேற்று (23ந்தேதி) ஒரே நாளில் மேலும் 465 போ் கொரோனாவுக்கு உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,476-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியுட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும்  15,968  பேருக்கு  நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,56,183-ஆக உயா்ந்துள்ளது.

நோய்த்தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்புவோர்எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  கடந்த  24 மணிநேரத்தில் 10,495 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து இதுவரை 2,58,685 போ் குணமடைந்துள்ளனா். அதாவது, 56.7 சதவீதம் நோய் பாதிப்பில் இருந்து  மீண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை கொரோனா தொற்று காரணமாக 1,83,022  போ் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 73,52,911 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,15,195 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்து உள்ளது.

தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் திகழ்கிறது. அங்கு இதுவரை  1,39,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 69,631 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6,531 பேர் பலியாகியுள்ளனர்.

2வது இடத்தை கடந்த 2 நாட்களாக தலைநகர் டெல்லி கைப்பறியுள்ளது. இதனால் தமிழகம் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

டெல்லியில், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை  66602-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் 64603 பேரும்,  குஜராத்தில் 28371 பேர், மத்தியப் பிரதேசத்தில் 12261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.