மும்பை: மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது.  20,160 ஆக பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன.
மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகளவில் உள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,326 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 4,935 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 57,152 ஆக இருக்கிறது. 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில் மும்பை நகரில் 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி அறிவித்துள்ளது. அவர்களில், 5.34 லட்சம் பேர் தீவிர பாதிப்புக்கு ஆளானவர்கள் என்றும் கூறி உள்ளது.