பிரசார பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து: 20 பேர் காயம்! மோடி கண்ணீர்

கல்கத்தா:

பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அப்போது அவர் கண்ணீர் விட்டார்.

மேற்கு வங்காள மாநிலம் மிண்டாபூரில்பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது.  கூட்டத்தில் மோடி பேசிக்கொண்டிருக்கும்போதே, பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த  ஓலையினால் வேயப்பட்ட கூடாரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பலர் சிக்கிக்கொண்டனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

மோடி கண்ணீருடன் ஆறுதல் கூறிய காட்சி

கூடாரத்திற்குள் சிக்கியவர்களை உடடினயாக மீட்க தனது பிரத்யேக பாதுகாவலர்களுக்கு மோடி உத்தரவிட்டார். அதே வேளையில் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையின ரும் உனடடியாக  விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.  இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் அருகிலுள்ள மினாட்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக தனது உரையை விரைவில்  முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, உடனே மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கூட்டத்தில் பேசிய மோடி, “இன்று, வங்காள மக்களிடம்  ஒரு புதிய சக்தியை தான் கண்டதாக வும், கூட்டம் அமைதியாக தொடர்கிறது என்பதை  யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியவர், இது என் வாழ்நாளில் மறக்க முடியாது. இந்த சந்திப்பை எனது வாழ்நாள் முழுவதும் நினைவு கூறுவேன் என்று கூறினார்.