Random image

நாடு முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில் 22 லட்சம் வழக்குகள் தேக்கம்: மத்தியஅரசு தகவல்

டில்லி:

நாடு முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேல், 22,90,364  வழக்குகள் தேங்கியுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேங்கி உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து,தேசிய நீதித்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில், நாடு முழுவதும் உள்ள   கீழ் நீதிமன்றங்களில், 5.97 லட்சம் சிவில் மற்றும் 16,92,769  லட்சம் கிரிமினல் வழக்குகள் உட்பட, மொத்தம, 22 லட்சத்து 90ஆயிரத்து, 364 வழக்குகள், 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளதாக தெரிவித்து உள்ளது.

மொத்தம் 2 கோடியே 50 லட்சம் வழங்குகள் தேங்கி உள்ள நிலையில், கீழ் நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கி உள்ள வழக்குகள் 8.29 சதவிகிதம் என்றும் கூறி உள்ளது.

குற்றவியல் வழக்குகள் சமுதாயத்திற்கு முற்றிலும் தீங்கு விளைவிப்பன. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை குறித்து வரையறுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

தேசிய நீதித்துறை கமிட்டியின் நடவடிக்கை  (NJDG) என்பது நடப்பு மின்-நீதிமன்றங்களின் ஒருங்கிணைந்த மிஷன் முறை திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது வழக்குகளை கண்காணிக்கும்  கருவியாக வேலை செய்கிறது, மேலும் வழக்குகளின் தன்மை குறித்து ஆராய்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பான தரவுகளை வழங்குவதற்காக தேசிய நீதித்துறை தரவு கட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் மின்-குழு அறிமுகப்படுத்தியுள்ளது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இந்த தரவு பிரிக்கப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ள பல ஆண்டுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு விரைவில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

24 உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் 10 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள விரைவுப் படுத்த வழக்குகள் குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.

கீழ் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள் தங்கள் அதிகார எல்லைக்குள் நிலுவையில் இருக்கும் வழக்குகளைச் சரிபார்க்க உயர் நீதிமன்றங்கள் வேண்டுகோள் விடுத்தன.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது கூடுதல் பெஞ்சை உருவாக்குவது ஆகியவை அடங்கும்.