” கடந்த ஓராண்டில் இந்திய எல்லையில் 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை ”- ராணுவத்தளபதி

கடந்த ஓராண்டு எல்லைப்பகுதியில் 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தளபதி ரன்பீர் சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

terrorist

வடக்கு ராணுவத்தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் இன்று கூறியதாவது, “ கடந்த ஓராண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர். இவை நேர்மையாகவே நடத்தப்பட்டன. இதனால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இது பாகிஸ்தானிற்கு பெரும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. அவர்கள் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை அனுப்பி வருகின்றனர். ஆனால் நமது எண்ணம் ஒரே குறிக்கோளுடன் உள்ளது. அரசு மற்றும் பாதுகாப்பு படை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது. மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதிகளை ஒடுக்கும் வல்லமை நமக்கு இருக்கிறது.

பயங்கவாதிகளை முற்றிலும் ஒழிப்பதே குறிகோளாகும். ஜம்மு காஷ்மீரில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எங்களின் நோக்கம் ஆகும் “ என கூறியுள்ளார்.